Mar 03

கீத் நொயார் விவகாரம்; அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர் கீத் நொயார் நீதிமன்றில் ஆஜராகாமையினாலேயே அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டுள்ளதது. அத்துடன் எதிர்வரும் 16 ஆம் ம் திகதி வரை இந்த நடவடிக்கை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்களையும் அன்றைய தினம் வரையில்  விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்று கல்கிசை நீதிவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது