Apr 13

செல்வா இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'

செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா நடித்து வரும் படத்துக்கு 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால், கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'கதாநாயகன்' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கும் படத்தில் அமலாபாலுடன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து செல்லா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதன் நாயகியாக ரெஜினா மற்றும் ஓவியா நடித்து வருகிறார்கள்.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளைச் சுற்றி நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்துக்கு 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.