Apr 12

கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் இந்தியா விஜயம்

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அமைச்சரவையில் உயர் பதவி வகிக்கும் இந்திய-கனேடியரான பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அவர்கள் அண்மையில் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.  இவரது விஜயம் ஏப்ரல் மாத நடுப்பகுதியளவில் இடம்பெறக்கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது விஜயம் குறித்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இவ்விஜயம் மேற்கொள்ளப்படுமிடத்து இவ்வருடத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யும்  ஐந்தாவது கனேடிய அமைச்சராக இவர் இருப்பார்.