Mar 03

நாளை யாழ்.செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி


யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

 

அத்துடன் வலிவடக்கில் இராணுவத்தினரிடம் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிப்பு, விமானப் படையினருக்கான விமானத்தளம் அமைப்பானது தொடர்பான காணி சுவிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.