Sep 18

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் !! புதுமையாக பெயர் சூட்டிய பெற்றோர்

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்  புதுமையாக பெயர் சூட்டிய பெற்றோர்

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி என்று முதல் எழுத்துக்கள் வரும்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே வரி ஒரே நாடு என்ற முறையில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில், நேற்று சூரத்தில் கஞ்சன் படேல் என்பவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.

பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள இந்த புதிய வரி விதிப்பால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட குழந்தைகளின் தாய் கஞ்சன்படேல், ஜிஎஸ்டி வரியை நினைகூறும் வகையில், கரவி,சஞ்ஜி,தாராவி என தனது மூன்று குழந்தைகளுக்கும் பெயர் சூட்டியுள்ளார்.