Sep 18

காலா படத்திற்கு லீவு போட்டு நடையைகட்டிய ஹுமா குரேசி

 ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தில் நடிக்கும் ஹீரோயின் ஹுமா குரேசி, படப்பிடிப்பிற்கு லீவு போட்டுவிட்டாராம்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது சென்னையின் பரபரப்பான பகுதியில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

தினமும் 12-15 மணிநேரம் சூட்டிங் பரபரப்பாக நடைப்பெறும் நிலையில், அதில் நடித்து வந்த ஹீரோயின் ஹுமா குரேஷி, திடீரென லீவு கேட்டுள்ளாராம்.

ஏனெனில் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோனுசூத் நடத்தி வரும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக துபாயில் நடத்தப்படும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளப் போகின்றாராம்.ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைப்பெறும் விருது வழங்கும் விழாவில் தான் கலந்துகொள்வதால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நபராக திகழ்வதோடு, பெருமையாகவும் நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

வரும் 21ம் தேதி நடைப்பெறும் விழாவில் கலந்து கொள்ள 20ம் தேதி சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல உள்ளாராம்.