Apr 11

டொறன்ரோ மேயர் ஜோன் டோரி இலங்கை, இந்தியா பயணம்

2014 நகரசபைத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இரட்டை நகர ஒப்பந்த வாக்கு நிறைவேற்றப்படவுள்ளது. டொறன்ரோ மேயர் ஜோன் டோரி இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை டொறன்ரோப் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பொலிவூட் திரைப்பட தயாரிப்பளர்களை சந்தித்து டொறன்ரோ நகரின் படப்ப்பிடிப்பு சம்பந்த்தப்பட்ட வாய்ப்புக்களை விளம்பரம் செய்ய இந்தியா பயணித்துள்ளார். கடந்த வருடம் படப்பிடிப்பு துறையால் டொறன்ரோ நகரின் பொருளாதாரம் $2 பில்லியணிற்கு மேல் பயன் கண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பயணத்தை முடித்தபின் வரும் ஞாயிறு டோரி அவர்கள் இலங்கை செல்வார். இவர்2014 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது இவருடன் இணைந்து செயற்பட்ட பிரகல் திரு அவர்களின் ஆலோசனைக்கு இணங்க தமிழர்கள் பரந்து வாழும் டொறன்ரோ நகரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இரட்டை நகர ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்தை தெரிவித்திருந்தார். கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் வடமாகாண சபையின் முக்கிய உறுப்பினரான சி.வி.கே சிவஞானம் அவர்களுடன் தொலைபேஸியூடாக சந்திப்பை ஏற்படுத்தி இந்த விடயத்தை உறுதிப்படுத்தியதோடு, தேரதலுக்கு முன் நடந்த தமிழ் ஊடக சந்திப்பிலும் தனது நோக்கத்தை தெரியப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியே இந்தப் பயணம் என அறியப்படுகின்றது.

இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவிற்கு முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் உட்பட பல உறுப்பினர்கள் வந்திருந்தபோதும் டோரி அவர்கள் அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களுடன் சந்தித்து நடக்கவிருக்கும் பயணத்தைப்பற்றி மேலும் உரையாடியிருந்தார்.

இந்தப் பயணத்தின் முலம் என்ன நன்மைகளை எதிர்பார்கலாம் என்று கேட்டபோது “இவ்வாறான பயணங்களுடாக வரும் ஒப்பந்தங்கள் நன்கு கையாளப்பட்டால் எமது தாயக மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும். குறிப்பாக ஈழத்தமிழ் சமுகத்தின் பொருளாதார வளர்சிக்கு உரமாக அமையும் என்பதில் ஐயமில்லை, அதுவே காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது” எனக் கூறினார் டோரி அவர்களின் நண்பரும், சமூக ஆலோசகருமான பிரகல் திரு அவர்கள்.

“இப்படியான ஒப்பந்தங்கள் வெற்றியாகப் பார்த்தாலும் அவையூடாக எமது மக்களுக்கு என்ன பயன், அந்த்தப் பயன் எப்படி செயல்வடிவம் பெறப்போகின்றது என்பதை தொடர்ந்து அவதானிக்க வெண்டும். அதற்கான அழுத்தத்தையும் ஒப்பந்தமிட்ட இரு தரப்பினருக்கும் மக்கள் தொடர்ந்தும் கொடுக்கவேண்டும்” என மேலும் தெரிவித்தார் பிரகல் திரு. டோரி மற்றும் கவுன்சிலர் மைக்கில் தொம்சன், அண்மையில் வெற்றியீட்டிய முதல் தமிழ் கவுன்சிலர் நீதன் சான் அவர்களுடன் மேயர் அலுவலக ஊழியர்கள் ​ ​மட்டுமே இந்தப் பயணத்தில் பங்கே​ற்​கி​​ன்றனர். வடமாகாண சபை சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தம், யாழ் நூலகம், முள்ளிவாய்க்கால் விஜயம், மற்றும் கொழும்பில் இலங்கை அரசு சார்ந்தவர்களுடனும் கனடிய தூதுவருடனும் சந்திப்பும் நடக்கவிருப்பதாக அறியப்படுகின்றது.