Apr 11

நகங்களைக் கடிக்கத்தான் வேண்டுமா?

சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கத்தை விடமுடியாது. ரசாயன நகப்பூச்சுகளால் தீங்கு ஏற்படலாம் என்ற பயமும் இருக்கும். இவர்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரூபான் நிறுவனம் சாப்பிடக்கூடிய ப்ராஸிக்கோ நகப்பூச்சை உருவாக்கியிருக்கிறது. 

“இத்தாலிய ஒயினின் சுவையிலும் நறுமணத்திலும் தயாரிக்கப்பட் டிருக்கும் நகப்பூச்சை எல்லோரும் விரும்புவார்கள். சாப்பிடக்கூடிய நகப்பூச்சாக இருந்தாலும் அதிக வெப்பம், தீ போன்றவற்றுக்கு அருகில் வைக்கக்கூடாது. எளிதில் தீப்பிடித்துவிடும். நகங்களில் பூசிய நகப்பூச்சை மட்டுமே சுவைக்க வேண்டும். 

நேரடியாகப் பாட்டிலில் இருந்து அப்படியே குடித்துவிடக்கூடாது போன்ற எச்சரிக்கைகளையும் கொடுத்துவிடுகிறோம். மே மாதம் முதல் இந்த நகப்பூச்சு விற்பனைக்கு வருகிறது” என்கிறது க்ரூபான் நிறுவனம்.