Mar 03

11 ஆவது நாளாகவும் காந்திப்பூங்காவில் மட்டு.பட்டதாரிகள்

மத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கவேண்டும் என்று கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் பதினோராவது நாளாகவும் கடும் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் நடைபெற்றுவருகின்றது.


காந்தி புங்கா முன்பாக ஒன்றுதிரண்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் வீதிகளில் சமைத்து வீதிகளிலேயே உண்டு,உறங்கி பதினோரு தினமாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து விரிவடைந்துவருவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.