Apr 11

புலம்பெயர் தமிழர்களுக்கு பெருமை சோர்க்கும் united விளையாட்டு கழகம்

கடந்த மார்ச் மாதம் 25ம், 26ம் தேதிகளில் York Indoor மைதானத்தில் இடம்பெற்ற Ontario மாகாணத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று united விளையாட்டுக் கழகம் சாம்பியன் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த வெற்றியானது 7வது ஆண்டாக தொடர்ந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்ட முதல் விளையாட்டுக் கழகம் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் Ontario மாகாணத்தின் 42 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த 780 விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த வெற்றிக்கு கடந்த ஆண்டின் வெற்றியை பல தமிழ் ஊடகங்கள் தமிழர் மத்தியில் எடுத்துச் சென்றமையால் G.T.A யின் பல பாகங்களைச் சேர்ந்த பல பாகங்களைச் சேர்ந்த பல புதிய வீர, வீராங்களைகள் United உடன் இனைந்து கொண்டமையும். தாய், தந்தையர்களின் ஒத்தழைப்பும் அதைத் தவிர பயிற்ச்சியாளர்களதும், வீர, வீராங்கனைகளது அயராத உழைப்பும், கால நிலையைப் பற்றி கவலைப்படாது பனிப்புயல் நாட்களில் கூட பயிற்சிகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடப்பட வேண்டுயனவையாகும். குறிப்பாக York மைதானத்தில் 2016 அக்டோபர் மாதம் தொடக்கம் வாரத்தில் நான்கு நாட்கள் இலவசமாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டாலும். பயிற்ச்சியாளர்களது திட்டமிட்ட தரமான பயிற்சிகளின் பெறு வேறுகளை இந்தப் போட்டியின் முடிவுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றது.



இந்த வெற்றி நிலைத்து நிற்க வேண்டியின் ஊடகங்களும், நண்பர்களும், பெற்றோரும் தம் மத்தியில் இலைமறை காயாக இருக்கின்ற திறமையுள்ளவர்களை இத்துறையில் ஈடுபட வைப்பதிலேயே தங்கியுள்ளது.

United விளையாட்டு கழகத்தை பொறுத்தவரை கடந்த 7வது வெற்றிகளும் மேலும் மேலும் தரமான நுட்பமான, திட்டமிடலுடன் கூடிய பயிற்ச்சிகளை வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி இருப்பதுடன், புதிய பயிற்சி நிலையங்களை G.T.A  யின் பல பகுதிக்கும் விரிவு படுத்த வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.




இன்று சத்தமின்றி யுத்தம் செய்து வெற்றி மாலை சூடி வரும் united கழகம் வெற்றி என்பதை விட பல இளைஞர் யுவதிகளது தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் பயிற்சிகளை கொடுத்து வருகிறது.

இக்கழகத்தை மேன்மேலும் வலுப்படுத்தும் உங்கள் ஆதரவு என்றும் வரவேற்கப்படுகிறது கோடைகால வகுப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக உள்ளன. மேலதிக விபரங்களுக்கு 416 838 39999 அழைக்கவும்.