Apr 11

குடிவரவுத் தடுப்புக்காவல் முறைகளில் மாற்றம்

குடிவரவுத் தடுப்புக்காவல் தொடர்பான விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கனேடிய மத்திய அரசு முயற்சி எடுப்பதாகத் தெரியவருகிறது. தடுப்புக்காவல் காலத்தைக் குறைத்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத குடிவரவாளர்களை அதியுயர் பாதுகாப்பான சிறைகளில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றுதல் போன்ற விடயங்கள்  ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகத்தின் “புதிய தேசியக் குடிவரவுத் தடுப்புக்காவல் வரைச்சட்டம்”  ஆணித்தரமான திட்டம் அல்ல, அது பொதுவான குறிக்கோள்களைக் கொண்ட ஒரு ஆவணம் மட்டுமே. ஆயினும் இக்குறிக்கோள்கள்  அமுல்படுத்தப்படும் பட்சத்தில் தேவையற்ற குடிவரவாளர்கள், குடிவரவுத் தடுப்புக்காவலில் நடாத்தப்படும் முறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.