Apr 11

நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டவர் குறித்துக் கருத்துத் தெரிவிக்க குடிவரவு அமைச்சர் மறுப்பு

கனடாவின் குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்படும் இந்நிலையில், குழந்தையாய் கனடாவிற்கு வந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் இருந்து, பின்பு குற்றச்செயல்கள் காரணமாக கனடாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட 59 வயதான நபர் குறித்து, கனேடியக் குடிவரவு அமைச்சர் கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

தனியான சம்பவங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் தனக்கு இல்லை எனவும், நாடுகடத்தல் உத்தரவுக்குள்ளானவர்கள்  மேன்முறையீடு செய்யப் பல வழிமுறைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.