Apr 11

அதிகரிக்கும் அகதிகள் வரவைக் கையாளத் தேவையான வளங்கள் எம்மிடம் உள்ளது: குடிவரவு அமைச்சர்

கனடா-அமெரிக்க எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக கனடாவினுள் அகதிகள் உட்புகும் இந்நிலையில் , அகதிகள் வரவைக் கையாளப் போதுமான வளங்கள் கனடாவிடம் உள்ளதாகக் கனேடியக் குடிவரவு அமைச்ச்சர் அஹமட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

வான்கூவர் நகரில் இடம்பெற்ற 30 புதிய குடிவரவாளர்களுக்கு குடியுரிமை  வழங்கும் நிகழ்வொன்றில் அமைச்சர் பங்கேற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். 16 நாடுகளில் இருந்து கனடா வந்த இவர்களுள் பலர் அகதிகளாகக் கனடாவை வந்தடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அகதிகளாகக் கனடா வருபவர்களின் என்ணிக்கை முன்னரை விட சற்று அதிகமானதே என்றும், இவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் மாறுபடும் எனவும், இத்தகைய மாறுபாடுகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் கனடாவிற்கு உள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.