Sep 15

100 டாலர்களுக்கு ஐபோன் X போன்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்

சர்வதேச சந்தையில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X 999 டாலர் விலையில் சில தினங்களுக்கு முன் அறிமுகமான நிலையில், ஐபோன் X போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் வெறும் 100 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பத்தாவது ஆண்டு விழா ஐபோன் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் 999 டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது. 

கூபோன் (GooPhone) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 100 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு சீனாவை சேர்ந்த, டிஎச் கேட் எனும் நிறுவனம் முன்பதிவு துவங்கியுள்ளது. டிஎச் கேட் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பார்க்க ஐபோன் X போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிலும் ஐபோன X போன்ற எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. கூபோன் மற்ற சிறப்பம்சங்கள்: 

- 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன்

- 8 எம்பி பிரைமரி கேமரா

- 2 எம்பி செல்ஃபி கேமரா

- குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

- 2100 எம்ஏஎச் பேட்டரி 

- ஆண்ட்ராய்டு 5.0 

- 3ஜி, ப்ளூடூத்,

வைபைஐபோன்ற சாதனத்தை ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. முன்னதாக சீனாவை சேர்ந்த UMIDIGI எனும் நிறுவனம் ஐபோன் 7 போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோன் 7-இல் பயன்படுத்தப்பட்ட பாலிகார்பனேட் பாலிஷிங் மற்ரும் மெட்டாலிக் பிளாக் நிறம் வழங்கப்பட்டது. 

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X விலை 64 ஜிபி மாடல் ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி, முக அங்கீகாரம் (face recognition), ஐஒஎஸ் 11, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, Qi தர வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.