Sep 15

மீண்டும் ஜெனீவாவில் சிறிலங்கா - ஜெனீவாவில் இருந்த சுதன்ராஜ்

ஐ.நா மனித உரிமைச்சபையின் 36வது கூட்டத் தொடர் இவ்வாரம் தொடங்கியிருக்கும் நிலையில்,இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையும் மீண்டுமொரு முறை ஜெனீவா நோக்கி குவியங்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாத 34வது கூட்டத் தொடர் அமர்வில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை வழங்கியிருந்தது.

இரண்டு ஆண்டுகளின் முடிவுக் கூட்டத் தொடரிலேயே சிறிலங்கா விவகாரம், ஜெனீவாவின் மேசைகளுக்குவரும் என பலரும் நினைத்திருந்த நிலையில், தொடங்கியுள்ள இக்கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம்பல்வேறு மட்டங்களில் அவதானிப்பினைப் பெற்றிருக்கின்றது.

ஐ.நா ஆணையாளரின் தொடக்க நாள் உரையின் குறிப்புக்கள் மட்டுமல்ல பல அனைத்துலக மனித உரிமைஅமைப்புக்களின் அறிக்கைகள், நாடுகளின் கருத்துக்களை இதனை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக 'உலகளாவிய சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது' என்ற ஐ.நா மனிதஉரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்களது கூற்று தமிழர் தரப்பினை பொறுத்தவரைநீதிக்கான நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

அமர்வின் தொடக்க நாள் உரையின் போதே ஆணையாளர் சிறிலங்கா விவகாரத்தினையும்உள்ளடக்கியிருந்தார்.

தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கியிருந்த இரண்டு ஆண்டுகால அவகாசத்தின்நடுப்பகுதியில் ஆணையாளர் அவர்கள், சிறிலங்கா தொடர்பில் வாய்மொழி அறிக்கையொன்றினைசபையில் சமர்பிக்க வேண்டியவராக இருக்கின்றார்.

இது அடுத்தாண்டு மார்ச் மாத கூட்டத் தொடரில் இடம்பெறும். ஆனால் அதற்கு முன்னராக இக்கூட்டத் தொடரில்சிறிலங்கா விவாகாரத்தினை தனது இக்கூட்டத் தொடரின் தொடக்க நாள் அமர்வின் உரையில் ஆணையாளர் அவர்கள் உள்ளடக்குவார் என்பது தமிழர் தரப்பு மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கமும் எதிர்பாராதஒன்றென்றே கருத வேண்டியுள்ளது.

காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியஆணையாளர், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்நீண்டகாலமாக இழுபறிப்படும் வழக்குகளுக்கு தீர்வுகாணல் உள்ளிட்ட , ஏனைய நம்பிக்கையைக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்குஏற்ப புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்த அவர், இலங்கைத்தீவின் வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்கள், மெதுவாக நடக்கும் சீர்திருத்தங்கள்அவர்களின் ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன எனவும் சிறிலங்காவுக்குஅவர் இடித்துரைத்திருந்தார்.

ஐ.நா ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பிலான நிலைப்பாட்டில் கீழ் வரும் விடயங்கள் முக்கியமானதாககருத வேண்டியுள்ளது தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான காலஅட்டவணை

- பொறுப்புகூறலுக்கான நம்பகமான நடவடிக்கை

- உலகளாவிய சட்ட நடவடிக்கைகளுக்கான தேவை

- வடக்கின் மக்கள் போராட்டங்கள்

1 - கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருந்த 30-1 தீர்மானத்தில்தமிழர் தரப்பு இரண்டுபட்டு இருந்தமை நினைவிருக்கலாம்.

சிறிலங்காவுக்கு கால அவகாசத்தினை வழங்குவது என்பது நீதியினை நீர்த்துப் போகச் செய்து விடும் எனவாதாடி தமிழர்களின் ஒரு தரப்பு, சிறிலங்கா விவகாரத்தினை அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தது.

இதற்கான அனைத்துலக சூழல் இல்லை என வாதாடிய மறுதரப்பு, இரண்டு ஆண்டு கால அவகாசம் என்பதுசிறிலங்கா விவகாரத்தினை ஐ.நாவில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றதோடு, வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த ஒரு கால அட்டவணை வரையப்படும் என தெரிவித்திருந்தது.

கடந்த காலத்தில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படத நிலையிலேயேஅனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் சிறிலங்காவை ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என தாம்கோருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல தமிழ் அமைப்புக்கள் கோரியிருந்தன.

தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையின் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளஆணையாளரின் கூற்று என்பது, சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கினை மட்டும் வெளிக்காட்டவில்லை. கூடவே கால அட்டவணை வரையப்படும் என்ற வாக்குறுத்திக்கு அமையவே தாம் குறித்ததீர்மானத்தினை ஆதரிப்பதாக மார்சில் வாதாடியிருந்த ஒரு தரப்பு தமிழர்கள் முகத்தில்கரிபூசப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவை,பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் பேரவை போன்றவர்கள் இத்தீர்மானத்துக்கு ஆதரவுதெரிவித்திருந்தனர்.

2 - தமிழர் தாயகத்தில் சமீபத்திய காலங்களில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள்போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் கவனத்தினை பெற்று வருவதனையே ஆணையாளரின் வடக்கு மக்களின்போராட்டங்கள் குறித்தான கருத்து அமைந்திருந்தது.

அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்பதற்கான போராட்டம், காணாமல் போனவர்களுக்கான போராட்டம்என்று தமிழ் அரசியற் தலைமைகளுக்கு அப்பால் மக்களது தன்னெழுச்சியான போராட்டங்களாக இவைகள் அமைந்துள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்து அமர்துள்ள சிறிலங்காவின் தற்போதையஅரசாங்கம், ஒப்பீட்டளவில் தமிழர்களுக்கு வழங்கியுள்ள வெளி என்பது, தமிழர்களின் அரசியல்உரிமைக்கானதோ, நீதிக்கானதோ, பொறுப்புக் கூறலுக்கானதோ அல்ல என்பதனையே இதுவெளிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் ஜெனீவாவுக்கு குழுக்களை அனுப்பி, தன்னை தற்காப்பு நிலையில் வைத்திருக்கும்சிறிலங்கா அரசாங்கத்தின் கன்னத்தினை செல்லமாக தடவிய ஆணையாளர், இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை, பேரவையைச் சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் கருதாமல், எல்லாமக்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான ஒரு அவசியமான கடமை கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

3 - பொறுப்புகூறலுக்கான சிறிலங்காவின் பொறுப்பற்ற போக்கினை மீண்டும் ஒரு தடவைஆணையாளரின் கூற்று வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது எனலாம்.

குறிப்பாக அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்தகுற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுக்காதது,உலகளாவிய சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற கூற்று இதில் மிகமுக்கியமானது.

சிறிலங்காவுக்குள்ளேயே அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என வாதிடும் சிறிலங்கா தரப்புக்குஆணையாளரின் கூற்று கசப்பானதாகவே இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல ஒரு வித அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

காரணம், காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனவின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு, இதனையே வெளிக்காட்டுகின்றது.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என்றகோரிக்கையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த கையெழுத்துப் போராட்டத்தில் 14மில்லியன் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

ஆணையாளரின் தற்போதைய கூற்று, இக்கையெழுத்துப் போராட்டத்தின் உயிர்ப்பினைவெளிக்காட்டியுள்ளது எனலாம்.

இவ்வாறு எதிர்பாராத தருணத்தில் ஆணையாளர் சிறிலங்கா தொடர்பில் ஆளமாக வெளிப்படுத்தியுள்ளகருத்துக்கள், ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பில் கொண்டிருக்கின்ற இறுக்கமானநிலைப்பாட்டினை மட்டுமல்ல அதன்மீதான மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் தீர்மானத்தினை ஆதரித்து சிறிலங்காவுக்கு வாய்ப்பு வழங்கிய உறுப்பு நாடுகளின்நிலைப்பாடு என்பது இங்கு முக்கியமானது.

தற்போதும் சரி, முற்போதும் சரி சிறிலங்கா தொடர்பில் ஆணையாளர் இறுக்கமானநிலைப்பாட்டினைக் கொண்டிருந்தாலும், உறுப்பு நாடுகளின் கைகளிலேயே யாவும் அடங்கியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டுதான், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அம்னெஸ்ரி போன்ற பல அனைத்துலகஅமைப்புக்கள் உறுப்பு நாடுகளை நோக்கி கைகளை நீட்டியுள்ளன.

2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின்இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஆணையாளரின் கருத்தினை வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகளாவிய நியாயாதிக்துக்கமைய சட்ட நடவடிக்களைமேற்கொள்ள வேண்டும் தமது தொடர் நிலைப்பாட்டுக்கு கிடைத்த புதிய நம்பிக்கையாக இது உள்ளதெனத்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை எதனையும் கேட்காது, அனைத்துலக சட்டவல்லுனர்களையும்புறந்தள்ளிவிட்டு பெயரளவில் சிறிலங்கா அமைக்கின்ற காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம்என்பது அனைத்துலக சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்களது கூற்றுபல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம்.

குறிப்பாக தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக பரிகார நீதி கோரிப் போராடி வரும்தமிழ்மக்களுக்கு ஆறுதலைத் தந்திருப்பதோடு அவர்களது நீதிக்கான போராட்டத்துக்கு புதுஉற்சாகத்தினையும் தந்துள்ளது.