Sep 13

"தியாக நாள்"

"தியாக நாள்"

இனம் ஒன்றின்

விடியலுக்காய்

ஒரு ஜீவன் நல்லைக்

கந்தனின் காலடியில்

அகிம்சை வல்லசிடம்

நியாயமான நியாயம் கோரி

உயிரை விலையாக்கி

உடலை மெழுகாக்கி

தியாகம் செய்ய

புறப்பட்ட புதிய நாள்.

<p>திட்டமிடாதபடி

எட்டி ஓடி வந்து

நெற்றித் திலகமிட்டு

அன்னை ஒருத்தி

தன் மகனை

தவ வேள்விக்கு

அனுப்பிய நாள்.

கோட்டை வேண்டும்

குல மானம் வேண்டும்

கொண்ட கொள்கை வேண்டும்

மக்கள் புரட்சியும் வேண்டும் அது

வெடிக்க வேண்டும்

அப்போது

கனவு மெய்ப்படும் என

கனவு கண்ட பார்த்தீபனின்

பன்னிரு நாளின் முதல் நாள்.

ஊரேழுப் புதல்வன்

மருத்துவ மாணவன்

தியாகி திலீபன்

தியாகப் பயண

முப்பதாண்டு கடந்த

முதல் நாள்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா