Sep 13

இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் முடக்கம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களை அந்நாட்டு அரசு முடக்கி உள்ளது. மிட்லாண்ட்சில் உள்ள தாவூத்தின் வீடுகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளன.

தாவூத் தேடப்படும் குற்றவாளி எனவும், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு , இங்கிலாந்து அரசு நிர்வாகிகளிடம் பேசி உள்ளது. தாவூர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விபரங்கள் இங்கிலாந்து அரசிடம் அளிக்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த இங்கிலாந்து அரசு, தாவூத்தின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தாவூத் மட்டுமின்றி அவரது கூட்டாளிகள் 21 பேரின் சொத்துக்களையும் இங்கிலாந்து அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தாவூத்தின் சொத்துக்கள் குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய லண்டன் மற்றும் ஸ்கார்ட்லாந்து யார்டு நிர்வாகத்திடம் மத்திய அரசு ஏற்கனவே ஒப்படைத்துள்ளது. தற்போது முடக்கப்பட்டுள்ள தாவூத்தின் சொத்து ரூ.15,000 கோடி என கூறப்படுகிறது.