Sep 13

ஜப்பான் பிரதமருக்கு குஜராத் சைவ உணவு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ேஷா அபே மற்றும் அவரது மனைவி அகி அபே ஆகியோருக்காக குஜராத் வகை சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

'ஷபா' அணிந்த ஊழியர்கள்

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மங்கல்தாஸ் ஹெரிடேஜ் ஓட்டல் உள்ளது. அங்குள்ள அகாஷியி என்ற பிரபலமான உணவகத்தில் தான் ஜப்பான் பிரதமருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. உணவுகளை பரிமாற வேட்டி, குர்தா மற்றும், 'ஷபா' என்று அழைக்கப்படும் விசேஷமான தலைப்பாகை அணிந்த ஓட்டல் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

விருந்திற்காக, 30 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இட்லியை போல, குஜராத்தில் கடலை மாவில் செய்யப்படும் காமன் டோக்லா என்ற உணவு வகை பிரபலமானது.

இது, இந்த விருந்தில் இடம் பெற்றுள்ளது. சேப்பங்கிழங்கில் செய்யப்பட்ட, 'ராஸ்பட்ரா', கொண்டகடலையில் செய்யப்பட்ட, 'கோடா பிரிட்டர்ஸ்', கிச்சடி, கொண்ட கடலை கிரேவி, பூசணி வகை உணவு, குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி, ரொட்டி வகைகள், பூரி, 

இத்துடன் தொட்டு கொள்வதற்காக சேமியா தூவி தக்காளி போட்டு செய்யப்பட்ட, 'உந்தியூ', பூண்டு மற்றும் உருளைகிழக்கு போட்டு செய்யப்பட்ட, ' லாசானியா பாடிடா', பருப்பு வகைகள், தயிரில் வெங்காயம் போட்ட' ரைதா' தயிரில் செய்யப்பட்ட இனிப்பு வகையான, 'ஸ்ரீகந்த்', மசாலா மோர் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

2 தலைமை சமையல்காரர்கள்

ஓட்டல் ஊழியர்களை கண்காணிக்க, அரசு மூலம் நியமிக்கப்பட்ட இரண்டு தலைமை சமையல்காரர்கள் அந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஜப்பானை சேர்ந்தவர்.மற்றொருவர் குஜராத்தை சேர்ந்தவர். என்னென்ன உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள். 

ஜப்பான் மக்கள் மீன் வகைகள் மற்றும் இறைச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே நேரத்தில், பவுத்த மத வழக்கப்படி, சைவ உணவு வகைகளையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே, குஜராத் மாநிலம் வரும் ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு குஜராத் வகை சைவ உணவு வகைகளே சமைக்கப்பட்டுள்ளன.